கீழே கிடந்த பண பையை காவல்துறையில் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு

21 Views

திருச்சி: திருச்சி, ஸ்ரீவைகுண்டத்தில் கீழே கிடந்த பணபையை எடுத்து காவல்;நிலையத்தில் ஒப்படைத்த வாலிபரை பொது மக்கள் பாராட்டினர்.

ஸ்ரீவைகுண்டம் தெற்கு யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் வெங்கடேஷ் சம்பவத்தன்று வீட்டில் இருந்து பஜாருக்கு சென்றபோது தனது மணிபர்சை தவறவிட்டு விட்டார்.

இந்நிலையில ஸ்ரீவைகுணடம் இல்லத்தார் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் வைகுண்டம் என்பவர் தெருவில் கிடந்த மணிபர்சை உதவி ஆய்வாளர் திரு.முருகபெருமாளிடம் ஒப்படைத்தார். பர்சில் இருந்த முகவரியை வைத்து மணிபர்சை தவறவிட்ட வெங்கடேஷை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமாள் வெங்கடேஷிடம் மணிபர்சை ஒப்படைத்தார். தெருவில் பணத்துடன் கிடந்த மணிபர்சை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த வாலிபர் வைகுண்டத்தை காவல்;துறையினர் மற்றும் பொது மக்கள் பாராட்டினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!