கும்பகோணம் உட்கோட்டக் காவல்துறையின் சார்பில் கஜா புயல் பாதிப்புக்களை எதிர்கொள்ள தயார் நிலையில் பேரிடர் மிட்பு படை

24 Views
கஜா புயலினால் பொதுமக்களுக்கு   எந்த  பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க வேண்டி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் திரு செந்தில்குமார் உத்தரவின்படி  புயல் பாதுகாப்பு   முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதில்  பேரிடர் மீட்பு படை. தயார் நிலையில்  உள்ளதை    மாண்புமிகு  வேளாண்மை துறை அமைச்சர்  துரைக்கண்ணு  அவர்கள்   மற்றும்  தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு.அண்ணாதுரை அவர்களும்  பார்வையிட்டார்கள்  தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புப் படையில்    எஸ்பி சிறப்பு காவல் படை எஸ்ஐ   கீர்த்திவாசன் தலைமையில் 13 காவலர்கள் ஈடுபட்டு  உள்ளனர்.
இதனால் பொதுமக்கள் கஜா  புயலினால்  எந்த  விதமான பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே  காவல் துறை கட்டுபாட்டு அறை எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் உடன் அங்கு  பேரிடர் மீட்பு படையினர் உதவிக்கு வருவார்கள் என காவல் துறையினர்   தெரிவித்துள்ளார்கள்.
நமது சிறப்பு செய்தியாளர்
குடந்தை
ப.சரவணன்
செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!