கழிவறை வசதியுடன் போலீஸ் நிழற்குடை நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் துவக்கம்

56 Views
கோவை: கோவை மாநகரம்¸ அவிநாசி ரோடு அரசு மருத்துவ கல்லுாரி அருகில் கழிவறை வசதியுடன் கூடிய நிழற்குடையை 09.11.2018 ம் தேதியன்று போக்குவரத்து துணை ஆணையாளர் திரு. சுஜித் குமார் இ.கா.ப அவர்கள் திறந்து வைத்து பேசுகையில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்றால் அருகே உள்ள நிறுவனங்கள் போன்றவற்றிற்க்கு தான் செல்ல வேண்டும்.
இவற்றை தவிர்க்க ‘பயோ-டாய்லெட்’ வசதியுடன் காவல்துறையினருக்கு நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது . நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் வாகன புகையில் இருந்து காவல்துறையினர்தங்களை காத்து கொள்ளும் வகையில் கண்ணாடி அறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.