சாலை விபத்தில் காவலர் உயிரிழப்பு, கூடுதல் ஆணையர் அருண் அஞ்சலி

சென்னை ராஜாஜி சாலையில் இருசக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந்த காவலர் ஆ.தேஸ்குமார் உயிரிழந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:
24 Views

சென்னை: சென்னை, தண்டையார்பேட்டை சின்னசாமி தெருவைச் சேர்ந்தவர் ஆ.தேஸ்குமார் (40). இவர் பெரியமேடு போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தேஸ்குமார், கடந்த 8-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.

அப்போது ராஜாஜி சாலை கடற்கரை அதிகாரிகள் உணவு விடுதி அருகே செல்லும்போது, எதிரே வேகமாக வந்த ஒரு மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து இருந்து கீழே விழுந்த தேஸ்குமார் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தேஸ்குமார் திங்கள்கிழமை அதிகாலை இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த தேஸ்குமாருக்கு நிர்மலா என்ற மனைவியும், 8 வயதில் வித்யாஸ்ரீ என்ற மகளும், 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

தேஸ்குமார் உடலுக்கு பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு கூடுதல் ஆணையர் ஏ.அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!