ஓசூரில் பிரபல ரவுடி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

32 Views

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அலுவலக சாலையை சேர்ந்தவர் சூரி(38) என்பவர் கடந்த 19-9-2016 அன்று ஓசூர் ரெயில் நிலையம் எதிரே உள்ள நேரு நகரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக ஓசூரை சேர்ந்த பிரபல ரவுடி கஜா என்கிற கஜேந்திரன் (28). மத்திகிரி பாபு (26), ஓசூர் ராயக்கோட்டை சாலையை சேர்ந்த சாஜித் பாஷா(24) உள்பட சிலரை ஓசூர் காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ரவுடி கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஓசூர் துணை காவல்துணை கண்காணிப்பாளர் திருமதி.மீனாட்சி, டவுன் காவல் ஆய்வாளர் திரு.லட்சுமணதாஸ் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஸ்குமாருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையை ஏற்று கஜா, பாபு, சாஜிக்பாஷா ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகர் உத்தரவிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!