வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

22 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவனேரியை சேர்ந்த நரேன் என்பவர் வெளியூர் சென்றுவிட்டு 02.10.2018ம் தேதி வீட்டிற்கு வந்தபோது, வீட்டை உடைத்து தங்க நகைகள் திருடு போனதாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில்¸ வழக்கு பதிவு செய்யப்பட்டு¸ குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும் என்பதற்காக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தோஷ் ஹதிமதி¸ இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையின் தீவிர விசாரணையில்¸ திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஜீனத், அஜித்குமார், சரவணன் ஆகியோர்களை சந்தேகத்தின் பேரில்¸ விசாரிக்க¸ அவர்கள் திருடியதை ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகளிடமிருந்து சுமார் ரூ. 6,50,000 மதிப்புள்ள 33 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு¸ நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளை விரைவாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!