ஈரோடில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

22 Views

ஈரோடு: ஈரோடு மாவட்டம்¸ பெருந்துறை அருகே உள்ள மூணுவள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ஊருக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி பிரபாகரன் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டனர். அவர் கொடுத்த புகாரின் பேரில், பெருந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் பெருந்துறை அடுத்த சீனாபுரம் கவுண்டம்பாளையம் பிரிவு அருகே பெருந்துறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. சுகவனம் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, 2 பைக்கில் சந்தேகப்படும் வகையில் வந்த 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் இம்ரான், பரத்குமார், மகேஸ்வரன் ஆகியோர் பெருந்துறையில் பிரபாகரனை மிரட்டி 3 பவுன் நகைகளை பறித்துள்ளனர். அதுமட்டுமன்றி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 41 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து¸ நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!