ஈரோடு மாவட்ட SP அறிவிப்பால் காவல்துறையினர் மகிழ்ச்சி

35 Views

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பிறந்தநாள் மற்றும் திருமணநாளில் விடுமுறை அளிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

விடுமுறையே இல்லாத அரசு பணி என்றால் அது காவல்;துறை வேலை தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதுவும் அரசு விடுமுறை நாட்கள் என்றால் காவல்துறையிருக்கு பணி அதிகமாக இருக்கும். குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அனைத்து மக்களும் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் போது, காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். இதுமட்டுமின்றி தங்கள் பிறந்தநாள், திருமண நாள்களை கூட கொண்டாட விடுமுறை இன்றி காவல் பணியில் ஈடுபடுவது வழக்கம்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இந்த (நவம்பர்) மாதத்தில் இருந்து காவல்துறையில் பணிபுரியும் காவலர்களின் பிறந்தநாள் மற்றும்; திருமணநாளுக்கு கட்டாய விடுமுறை அளிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சக்திகணேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட காவலருக்கு தொலைபேசியில் பிறந்தநாள் மற்றும் திருமண வாழ்த்து கூறி, கண்டிப்பாக விடுமுறை எடுத்து குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்படுகிறது.

காவல்துறையினர் மகிழ்ச்சி:

இது ஈரோடு மாவட்ட காவல்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். சக்திகணேசன் கூறியதாவது:- காவல்துறையினர் எப்போதும் மன அழுத்தம் கொண்ட பணிகளிலேயே ஈடுபட வேண்டியது உள்ளது. அவர்களின் பிறந்தநாள், திருமணநாட்களில் கூட தங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்கும் சூழல,; இன்னும் மன அழுத்தத்தை கொடுக்கும். எனவே அந்த நிலையில் இருந்து சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினருக்கு அவர்களின் பிறந்தநாள் மற்றும் திருமணநாளில் கட்டாய விடுமுறை அளிக்கப்படுகிறது.

அவர்கள் இந்த நாட்களை மகிழ்ச்சியோடு குடும்பத்துடன் இணைந்து கொண்டாடவும் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. இவ்வாரு காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.சக்திகணேசன் கூறினார்.

 

ஈரோட்டிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.

திரு. R. கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

திரு. N. செந்தில்குமார்.
ஈரோடு மாவட்ட பொதுசெயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!