தேடப்படும் குற்றவாளியை தனி ஆளாக பிடித்த தலைமை காவலருக்கு ஆணையர் பாராட்டு

21 Views

திருப்பூர்: திருப்பூர் மாநகர வீரபாண்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் திரு. கெளரி சங்கர். இவர் 13.10.2018ம் தேதியன்று இரவு வீரபாண்டி பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தவரை பிடித்து விசாரித்தார்.

அவரிடம் பிளேடு மற்றும் பல டூல்ஸ் வைத்திருந்திருந்தான். இதனை அறிந்த தலைமை காவலர் அவரை மடக்கி பிடித்து சக காவலர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மற்ற காவலர்கள் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையில் கூரையைப்பிரித்து திருடுவதில் வல்லவனான மாயக்கண்ணன் என்பது தெரிய வந்தது. தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்துள்ளான். இவனை தனி ஒருவராக போராடி பிடித்த தலைமை காவலர் திரு. கெளரி சங்கரை திருப்பூர் மாநகர ஆணையர் திரு. மனோகர், இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!