காவலன் செயலி (Kaavalan App) பற்றி எடுத்துரைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

22 Views

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செந்தில் குமார் அவர்கள் 26.10.2018-ம் தேதியன்று பான் செக்கர் மகளிர் கல்லூரியில் காவலன் (Kaavalan) என்ற செயலி பற்றி கூறுகையில் தமிழக காவல்துறையினரால் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருந்துவருகின்றது. இச்செயலியை Google Play Store மூலமாக அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் காவல்துறையினரின் அவசர உதவியை பெறமுடியும்

. இச்செயலியில் உள்ள சிவப்பு குறியீட்டை அழுத்தினால் தமிழக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சென்று¸ தாங்கள் இருக்குமிடத்தை GPS மூலமாக அறிந்து கொள்ள முடியும். உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை அணுகி தகவல் தெரிவித்து குறைந்த நேரத்தில் காவலர்கள் தங்களது இடத்திற்கு வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள். மேலும் இச்செயலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவிகளிடத்தில் எடுத்துரைத்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!