தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு

38 Views

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

அதன் விபரம் பின்வருமாறு,

1. சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி டிஜிபி அலுவலக ஐஜியாகவும்,
2. கட்டாய ஓய்விலிருந்த டிஐஜி பாலகிருஷ்ணன்இ சென்னை குற்றப்பிரிவு இணை ஆணையராகவும்,
3. கட்டாய ஓய்விலிருந்த எஸ்பி விஜயகுமார், பொருளதார குற்றப்பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
4. டிஜிபி அலுவலக நிர்வாக டிஐஜி செந்தில்குமாரி சென்னை ரயில்வே டிஐஜியாகவும்,
5.சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையர் துரைஇ திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும்,
6. திருவாரூர் மாவட்ட எஸ்பி விக்ரமன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கணினி துணை எஸ்பியாகவும்
7. கோவை சட்டம்இ ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமிஇ மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
8. சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி கண்காணிப்பாளராக இருந்த திரு.ராமர், சொத்து உரிமை அமலாக்க நுண்ணரிவு பிரிவு,சென்னை, காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
9. சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி கண்காணிப்பாளராக இருந்த திருமதி.தீபா கணிகர், சென்னை மேற்கு மண்டல போக்குவரத்து துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு

10. வேலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அதிவீரபாண்டியன் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று சென்னை தலைமையலுவகத்தில் உள்ள காவலர் நலபிரிவு காவல்துறை தலைவர்(உதவி) பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

11. திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநிவாசன் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று அரியலூர் மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

12. ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலாஜி சரவணன் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

13. திண்டுக்கல் மாவட்ட தலைமை அலுவலக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. பாலகிருஷ்ணன் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று சென்னை தலைமையலுவகத்தில் உள்ள Establishment  பிரிவு  காவல்துறை தலைவர்(உதவி) பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

14. சென்னை தலைமை அலுவலக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சண்முகம் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று சென்னை தெற்கு மண்டல லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

15. தமிழ்நாடு போலீஸ் அகடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனா காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று சென்னை தலைமை அலுவலக பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

16. தஞ்சாவூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டாலின் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று சென்னை மாநகர மாநில ஒருங்கிணைந்த காவல் கட்டுப்பாட்டு அறை காவல் கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

17. சென்னை பாதுகாப்பு பிரிவு சி.ஐ.டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜா காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று சென்னை பாதுகாப்பு பிரிவு- 1, சி.ஐ.டி காவல் கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

18. சென்னை பெருநகர மத்திய குற்ற பிரிவு – 2 கூடுதல் காவல் துணை ஆணையராக திரு. ராதாகிருஷ்ணன் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்று அமலாக்கப் பிரிவு, சென்னை, காவல் கண்காணிப்பாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!