தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சுற்றிவளைத்து கைது செய்த தனிப்படையினர்

22 Views

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சந்தோஷ் ஹதிமானி இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இந்நிலையில் 20.10.2018-ம் தேதியன்று செங்கல்பட்டு அருகே ஒழலூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் சென்னையைச் சேர்ந்த கோபி என்பதும் செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் அவரை கைது செய்து அவரிடமிருந்து 90 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பின் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!