சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை

24 Views

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம்¸ நீலகிரி காலனி பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை கடந்த 26.08.2016ம் தேதியன்று வீட்டிற்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்த பாபு என்பவர் மீது தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.

இவ்வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில்¸ 22.10.2018 ம் தேதியன்று நீதிபதி செல்வி. அன்புசெல்வி அவர்கள் குற்றவாளி பாபுவிற்கு அத்துமீறி வீட்டில் நுழைந்த குற்றத்திற்காகவும்¸ மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகவும்¸ பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகவும் என மொத்தம் 40 ஆண்டுகள் சிறை தண்டனையும்¸ ரூ.9 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!