காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி

31 Views

காஞ்சிபுரம் : தமிழ்நாடு காவல் துறையில் காவல் பணியின் போது வீர மரணம் அடைந்த காவல்துறையினரை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21-ம் தேதியன்று காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட உள்ள நிலையில் காவலர்களின் தியாகங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் 15.10.2018-ம் தேதியன்று காவல்துறை சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கிய இப்போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சந்தோஷ் ஹதிமனி இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்துப்பின் போட்டியில் கலந்துகொண்டார்.

இப்போட்டியில் காவலர்கள் பள்ளிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக 7 கிலோமீட்டர் தூரம் ஓடி விட்டு மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்தடைந்தனர்.இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு காவல்துறை சார்பில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!