Thu. Feb 21st, 2019

தமிழகத்தில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:
62 Views

கோவை மாநகர காவல் ஆணையராக இருந்த திரு.பெரியய்யா, மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல் அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள திரு.சுமித் சரண், கோவை மாநகர காவல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்திருப்புப் பட்டியலில் இருந்த ஐஜி திரு.பிரமோத் குமார், ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் காவல் பொதுப் பிரிவு ஐஜி திரு.சாரங்கன், காவல்துறை பயிற்சி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!