பேருந்தில் பயணி தவறவிட்ட ரூபாய் 18 ஆயிரத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

34 Views

தேனி : திண்டுக்கல் மாவட்டம் செங்குத்தண்டான் பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஜேசிபி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 28.09.2018-ம் தேதியன்று வேலைக்கு செல்ல தேனி பேருந்து நிலையத்திலிருந்து மூணாறு செல்லும் அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தார்.

திடீரென வயிற்றில் உபாதை ஏற்படவே சீட்டில் பையை வைத்து விட்டு பேருந்தில் இருந்து இறங்கி திரும்பி வந்து பார்த்த போது பேருந்து போடி நோக்கி சென்று விட்டது. பணப்பையை தவறவிட்டது குறித்து அங்கு பணியில் இருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார்.

அத்தகவல் குறித்து விசாரித்த போது பேருந்து ஓட்டுநர் அப்பையை மீட்டு போடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன் அடிப்படையில் பாலமுருகன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.ராஜன் அவர்கள் போடி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று பணப்பையை மீட்டு போலீசார் பாலமுருகனிடம் ஒப்படைத்தனர். அவர் கைப்பையை சரி பார்த்த போது அதிலிருந்த ரூ.18 ஆயிரம் பத்திரமாக இருந்தது.

துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டு கொடுத்த காவல்துறையினருக்கும்¸ பயணிகளுக்கும் பாலமுருகன் நன்றியை தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!