பல்வேறு திருட்டில் ஈடுபட்டு வந்த 5 நபர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையிருக்கு பாராட்டு

53 Views

தேனி :  தேனி மாவட்டம் உத்தமபாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் வழிப்பறி¸ திருட்டு¸ கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில் அதனை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் கேரள பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் வளம் வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலும்¸ உத்தமபாளையம் களிமேட்டுப்பட்டியில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை பொதுமக்கள் தட்டி கேட்ட போது காரில் இருந்தவர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி தப்பிச்சென்றதாக உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரிலும் காவல் ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன் மற்றும் திரு.உலகநாதன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த வாகனம் கம்பத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நிறுத்தப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து போலீசார் அந்த விடுதியில் விசாரணை செய்ததில் அந்த நபர்கள் கடந்த சில தினங்களாக அங்கு தங்கியிருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை சுற்றி வளைத்து அங்கிருந்த 5 பேரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 5 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தேனி மாவட்டத்தில் வழிப்பறி¸ கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

குற்றவாளிகள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து நான்கு சக்கர வாகனம்¸ கத்தி¸ அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!