தூத்துக்குடி பொதுமக்கள் குறைகளை தெரிவிப்பதற்காக காவல்துறை சார்பில் புகார் பெட்டி

52 Views

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் – காவல்துறை இடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் தயக்கமின்றி குறைகளை தெரிவிப்பதற்காக புகார் பெட்டி வைக்கும் திட்டம் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வார்டு வாரியாக போலீசாரை நியமனம் செய்யும் திட்டம் 09.09.2018ம் தேதியன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. முரளி ரம்பா¸ இ.கா.ப அவர்கள் தலைமை வகித்து 20 வார்டுகளுக்கு 66 போலீசாரை நியமனம் செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில் ”தூத்துக்குடியில் பொது மக்களுக்கு சேவை செய்வதற்காக வார்டு வாரியாக போலீஸ் நியமிக்கப்பட்டுள்னர். முதல் கட்டமாக வடபாகம் காவல் நிலையத்துக்குட்பட்ட 20 வார்டுகளில் பணியாற்ற 66 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு உதவியாக இருப்பார்கள். மக்கள் அவர்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு வார்டிலும் பொது மக்கள் கூடும் இடங்கள் முக்கிய பகுதிகளில் புகார் பெட்டி வைக்கப்படும். மக்கள் எவ்வித அச்சமும் இன்றி தங்கள் குறைகளையும், நல்ல பணிகளையும் தெரிவிக்கலாம். இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இத் திட்டத்தினை விரிவு படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!