*ஹலோ போலீஸ் அமைப்பு மூலம் 150 அழைப்புகளின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு

61 Views

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஹலோ போலீஸ் அமைப்பு மூலம் 150 அழைப்புகளின் கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பாவது, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் நலன் கருதி துரித சேவைக்காக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு.முரளி ரம்பா I.P.S., கடந்த ஜூலை மாதம் 4 ம் தேதி ஹலோ போலீஸ் செல்போன் நம்பரான 9514144100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் அப்பகுதிக்கு போலீஸ் விரைந்து வந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வர் என்று தெரிவித்தார். தற்போது வரை மேற்படி ஹலோ போலீசுக்கு 150 புகார்கள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது .

அதில் 128 நேரடி அழைப்புகளும் , 1 எஸ்.எம்.எஸ், மூலமாகவும் , வாட்ஸ் அப்,பேஸ்புக் வழியே 21 அழைப்புகளும் வந்துள்ளது . இவ்வாறு தகவல் தெரிவித்தவர்களின் பெயர், முகவரி ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் மேற்படி புகார்களின் கீழ் சம்பவஇடத்துக்கு அந்தந்தப் பகுதி போலீசார் உடனடியாக சென்று நடவடிக்கை எடுத்து பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளனர்.

அதாவது சட்டவிரோத மதுவிற்பனை, மணல் கடத்தல், திருட்டு வழக்கு தொடர்பான தகவல்கள், கஞ்சா, புகையிலை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் அளித்துள்ள தகவலின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர் .

காவல்துறையைப் பொறுத்தமட்டில் இந்த சேவையின் மூலம் வரும் தகவல்கள் அவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. ஆகவே ஹலோ போலீஸ் செல்போன் நம்பருக்கு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரியப்படுத்தி சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!