15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள், தமிழக அரசு அறிவிப்பு

Admin

பொது மக்களின் சேவையில், தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு, சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவரது பணியைப் பாராட்டி சிறந்த பொது சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி,

 1. அமரேஷ் பூஜாரி, ஐபிஎஸ், கூடுதல் காவல் துறை இயக்குனர் தொழில்நுட்ப சேவைகள் பிரிவு
 2. முனைவர் திரு. அமல்ராஜ், ஐபிஎஸ், கூடுதல் காவல் துறை இயக்குனர் செயலாக்கம் பிரிவு
 3. திருமதி. விமலா, காவல் துணை ஆணையர், நுண்ணறிவு பிரிவு சென்னை பெருநகர காவல்
 4. திருச்சி மாநகர கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.நாவுக்கரசன்
 5. சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் திரு.பிரசாத் அவர்கள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. .

இதேபோன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்து பாராட்டும் வகையில், கீழ்க்கண்ட பத்து காவல்துறை அதிகாரிகளுக்கு 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பதக்கங்கள் வழங்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 1. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் திருமதி.செல்வி
 2. கன்னியாகுமரி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் திருமதி .சாந்தி
 3. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு உட்கோட்டம் குமாரபாளையம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ரவி
 4. கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் வட்டம் காவல் ஆய்வாளர் திருமதி.சாயி லட்சுமி
 5. ராமநாதபுரம் சத்திரக்குடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.அமுதா
 6. திண்டுக்கல் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுப் துறை காவல் ஆய்வாளர் திருமதி .சந்தானலக்ஷ்மி
 7. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு .சீனிவாசன்
 8. கோவை மாநகர சட்டம் ஒழுங்கு ஆர்எஸ் புரம் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு .கனகசபாபதி
 9. தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ஆடிவேல்
 10. சேலம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமதி.அனந்தலட்சுமி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

விருது பெறுவோர் ஒவ்வொருவரும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட விருதுகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இராணிப்பேட்டை SP உட்பட 7 IPS அதிகாரிகள் பணியிடமாற்றம்

727 தமிழகத்தில் ஏழு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ். கே. பிரபாகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 1.ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452