குற்ற சம்பவங்களை தடுக்க ஆய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது

86 Views

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குற்றங்களை தடுப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் நேற்று நடந்தது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று காலையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காத வண்ணம் தடுப்பது, நடந்த குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுத்து எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத்தருவது, அதே போன்று சாலை விபத்துக்களை தவிர்ப்பது குறித்தும், விபத்தில் பாதிக்கப்பட்டோரை விரைந்து காப்பாற்றி சிகிச்சையளிப்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம், காவல் துணை கண்கணிப்பாளர் பிரகாஷ், முத்தமிழ், சகாயஜோஸ், தர்மலிங்கம், தீபு, ஜெபராஜ், ஞானசம்பந்தன், பாலச்சந்திரன், லிங்கத்திருமாறன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி வெகுமதி வழங்கப்பட்டது. மேலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆய்வாளர்கள் விஜயலட்சுமி, ஆயுதப்படை உதவி-ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் பெண் தலைமை காவலர் லதா ஆகிய 3 பேர்களையும் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் முரளிரம்பா நற்சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தனிப்பிரிவு உதவி-ஆய்வாளர்கள் உமையொருபாகம் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!