கவர்னர் வருகையொட்டி பலத்த காவல் பாதுகாப்பு

Admin

கடலூர்: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இருந்து இன்று காரில் நெய்வேலி வருகிறார். இதையொட்டி நெய்வேலியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் நெய்வேலி வட்டம் எண் 11-ல் அமைந்துள்ள புத்தக கண்காட்சி திடலில் 21-வது புத்தக கண்காட்சி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த கண்காட்சி வருகிற 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று மதியம் 12 மணி அளவில் காரில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் வழியாக கடலூர் அருகே மடப்பட்டுக்கு மாலை 3.30 மணிக்கு வருகிறார்.

பின்னர் அங்கிருந்து வீரப் பெருமாள்நல்லூர், பண்ருட்டி வழியாக நெய்வேலிக்கு மாலை 4.30 மணி அளவில் வந்தடைகிறார். அங்கு அவருக்கு என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து அவர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். விழா முடிந்ததும் மாலை 6 மணி அளவில் மீண்டும் கார் மூலம் சென்னைக்கு திரும்பி செல்கிறார்.

கவர்னரின் வருகையையொட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கவர்னர் வரும் வழியில் உள்ள முக்கிய சந்திப்புகளிலும், நெய்வேலியிலும் பாதுகாப்பு பணியில் 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கடலூரில் கொடூரம் கழுத்தை அறுத்து விவசாயி கொலை

3 கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் முருகையன் (37). விவசாயி. இவருடைய மனைவி அனிதா(32). இவர்களுக்கு அமுதா(17) என்ற மகளும், அமுதராஜ்(13), அமல்ராஜ்(5) என்று 2 மகன்களும் உள்ளனர். இவரது வீட்டுக்கு எதிரே பல்வேறு அரசியல் கட்சியினரின் கொடி கம்பங்கள் உள்ளன. இங்கு கட்டப்பட்டுள்ள திண்ணையில், முருகையன் தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாப்பிட்ட முருகையன், பின்னர் […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami