16 டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்

Admin

சென்னை: தமிழக காவல்துறையில் 16 துணை காவல் கண்காணிப்பாளர்களை (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.

இதுகுறித்த விவரம்: தமிழக காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணி ஒழுங்கீனம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டும் காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி 16 டி.எஸ்.பி.களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி திரு.அசோக்குமார் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதில், சென்னை பெருநகர காவல்துறையில் மட்டும் 12 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமாக பூக்கடை உதவி ஆணையர் திரு.ஜெ.சங்கர், சென்னை காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை க்யூ பிரிவு டிஎஸ்பி திரு.எஸ்.மதி, சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கும், தரமணி உதவி ஆணையர் திரு.எம்.அழகு, சைதாப்பேட்டைக்கும், பூந்தமல்லி உதவி ஆணையர் திரு.ஜெ.அய்யப்பன், துரைப்பாக்கத்துக்கும், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் திரு.சி.எஸ்.வேலவர், பாதுகாப்பு பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Next Post

கடலூரில் போலீஸ் பயிற்சி நிறைவு விழா ஏ.டி.ஜி.பி. திரு.பிரதீப் வி.பிலிப் பேச்சு

374 கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இளைஞர் காவல்படையில் இருந்து காவல் பணிக்கு தேர்வான இளைஞர்களுக்கு கடலூர் காவல் பயிற்சி பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 26–ந்தேதி முதல் கடந்த மாதம் வரை காவல் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியின் நிறைவு விழா கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. விழாவின் தொடக்கமாக பயிற்சி பள்ளி முதல்வரான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் வரவேற்று பேசினார். அவர் பேசுகையில், கடந்த 6 […]

மேலும் செய்திகள்

error: Content is protected !!
Bitnami