உயிர் நீத்த காவலர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

Admin
0 0
Read Time3 Minute, 55 Second

சென்னை பெருநகரக் காவல், செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சி. தேவேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்.

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. K. பிரபாகரநாகேந்திர ராஜா அவர்கள் தனது வீட்டில் கீழே விழுந்து அடிபட்டு உயிரிழந்தார் என்ற செய்தியையும்.

சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை-1, ‘உ’ நிறுமம், 30-வது அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. M. முரளிகுமார் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்.

திருப்பூர் மாவட்டம், மூலனூர் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. K. மோகன்ராஜ் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. க. ரவிச்சந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்.

நீலகிரி மாவட்டம், லவ்டேல் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. D. உதயகுமார் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்.

திருச்சி மாநகரம், பொன்மலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. A. ஜான்பிரிட்டோ அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காவல் கட்டுப்பாட்டறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. P. நடராஜன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்.

மதுரை மாநகரம், திலகர் திடல் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. S. கருப்பையா அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்.

விருதுநகர் மாவட்டம், காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. கணேசன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 10 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

!! உயிர் நீத்த காவலர்களுக்கு போலீஸ் நியுஸ் பிளஸ் சார்பாக இரங்கலை தெரித்துக் கொள்கின்றோம்!!

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெய்வேலியில் பரபரப்பு பிரபல ரவுடி வெட்டிகொலை

83 கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள தாண்டவன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பரசுராமன் மகன் சசிகுமார் என்கிற வெட்டு சசி(26). பிரபல ரவுடி. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami