வெளி மாநில தொழிலாளர்களை அரவணைத்து, மளிகை பொருட்கள் வழங்கிய திருமுருகன்பூண்டி காவல் ஆய்வாளருக்கு, ஆணையர் பாராட்டு

Admin

திருப்பூர் : வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்னும் கூற்றுக்கு ஏற்ப, கொரானா வைரஸ் தொற்று பரவலால்,உலகமே முடங்கி கிடக்கும் இவ்வேளையில், பிழைப்பிற்காக நம் தமிழ் நாட்டிக்கு தஞ்சம் பிழைக்க வந்த பிற மாநிலத்தவர்களை பசியால் நோகடிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் நம் தமிழக காவல் துறையினர், பாதுகாப்பு பணியுடன், ஏழை, எளிய மக்களின் பசியை போக்கும் நற்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

அதன் படி, திருப்பூர் மாநகர திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைப்புதூர் பகுதியில் ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 21 குடும்பங்களுக்கு தலா 10 KG அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் திருமுருகன் பூண்டி காவல் ஆய்வாளர் திருமதி.முனியம்மாள் மற்றும் ரோந்து காவலர் 296 விஜயகுமார் அவர்களால் வழங்கப்பட்டது.

இந்த செயலை செய்த ஆய்வாளர் மற்றும் காவலரை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சஞ்சய் குமார், IPS மற்றும் துணை ஆணையர்கள் திரு.பத்ரிநாராயணன், IPS, பிரபாகரன், IPS ஆகியோர் வெகுவாக பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் உட்பட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு

232 திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா, ஏரிதண்டா கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரவி வ/29 என்பவரையும், தண்டராம்பட்டு தாலுக்கா கீழ்பாச்சார் கிராமத்தை சேர்ந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452