வாகன ஓட்டுனரிடம், கொள்ளை 3 நபர் கைது

admin1
சென்னை :  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த,  சிரஞ்சீவி (21), என்பவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக,  பணிபுரிந்து வருகிறார். அவர் வேலை செய்யும் நிறுவனத்தின், லாரியில் (11.05.2022), அன்று விடியற்காலை சுமார் 04.30 மணியளவில்,  கொடுங்கையூர், மூலக்கடை, GNT ரோடு வழியாக சென்று கொண்டிருந்தபோது, 4 நபர்கள் சிரஞ்சீவியின்,  லாரியை வழிமறித்து நிறுத்தி, அவரை மிரட்டி, அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து சிரஞ்சீவி, கொடுங்கையூர் காவல் நிலையத்தில்,  புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர்,  தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மகேஷ் (எ) அப்பு (30), மாதவரம்,  ஜெயச்சந்திரன் (எ) சரத் (28),  கொடுங்கையூர்,  கருணாகரன் (21),  பெரம்பூர் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் செல்போன், பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தென்காசியில் கொலை குற்றவாளி மீது குண்டாஸ்

549 தென்காசி :  தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட,  அய்யாபுரம் பகுதியில் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட , சரவணன் என்ற நபரை பிரிவு 14  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452