ரூ.68 லட்சம் மோசடி, கட்டட அமைப்பாளர் கைது

admin1

சென்னை :  சென்னை, திருவல்லிக்கேணி, சி.என்.கே., சாலை பகுதியைச் சேர்ந்த சகிலா பானு, (42),  இவர் தனக்கு சொந்தமான இடத்தில்,  வீடு கட்டுவதற்கு முடிவு செய்தார்.  இதையடுத்து, அதே பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும்,  முகமது சாகில், (40), என்பவரிடம், சகிலா பானு அணுகினார். அதற்கு அவர், வீடு கட்டித் தருவதாக சகிலா பானுவிடம்  உறுதியளித்து, சிறுக, சிறுக பணம் பெற்று வந்தார். அந்த வகையில், சாகில் 68 லட்சம் ரூபாய்,  ரொக்கம் பெற்றதாக தெரிகிறது. ஆனால், அவர் சொன்னபடி, சகிலா பானுவுக்கு வீடு கட்டிக் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர், திருவல்லிக்கேணி,  காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் , முகமது சாகில் மீது நேற்று மோசடி , வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆட்டோவில் கஞ்சா கடத்தல், பெண் உட்பட 3 பேர் கைது

492 சென்னை :  மதுரவாயல் காவல் துறையினர் , நேற்று முன்தினம் போரூர் சுங்கச்சாவடி பகுதியில்,  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆட்டோ ஒன்றை மடக்கினர்.  இதில், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452