மோகனூர் அருகே நிலத்தகராறில், விவசாயி கைது

admin1

நாமக்கல் :  நாமக்கல்  மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி,  ஊராட்சி சென்னாக்கல் புதூரை சேர்ந்த பெரியசாமி (62).  இவருடைய தம்பி முத்துசாமி (59),  விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமான, விவசாய நிலம் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக,  தகராறு இருந்து வருகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம்,  பெரியசாமி தனது வீட்டில் தென்னங் கீற்று பின்னி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முத்துசாமி,  அவருடைய மனைவி சம்பூரணம் (52), மகன்கள் இருவர் பஞ்சர் கடை,  வைத்துள்ள சதீஷ்குமார் (27),  ஆனந்த் (25),  ஆகிய 4 பேரும் சேர்ந்து பெரியசாமி, அவருடைய மனைவி நாகம்மாள் (57),  ஆகியோரை தகாத வார்த்தையால்,  திட்டி உருட்டு கட்டையால்,  தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.  இதில் படுகாயம் அடைந்த கணவன் மனைவி இருவரையும்,  அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில்,  சேர்த்தனர். பின்னர் பெரியசாமி மோகனூர்காவல் துறையில்,  கொடுத்த புகாரின்பேரில் சிறப்பு காவல் ஆய்வாளர்,  திரு. முருகேசன்,  வழக்குப்பதிவு செய்து அண்ணன், அண்ணியை தாக்கிய முத்துசாமியை,  கைது செய்தார். தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் காவல் துறையினர், தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

டி.என்.பி.எஸ்.சி, உறுப்பினர் பேட்டி

605 திண்டுக்கல் :   தமிழகத்தில் நாளை நடைபெற,  உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வை , 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். ஆண்களைவிட,  பெண்கள் அதிகம் பேர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452