மூதாட்டியை தோளில் தூக்கி சென்ற காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய SP

Admin
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது 09.10.2021 அன்று வள்ளியூர் யூனியனுக்கு உட்பட்ட சங்கனாபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்களிக்க வந்த வயதான மூதாட்டியை மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.செய்யது நிஷார் அகமது அவர்கள் தனது தோளில் சுமந்துகொண்டு வாக்களிக்க உதவி செய்தார். இந்நிகழ்வு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு காவல்துறை மக்களின் நண்பன் என்பதை நிரூபித்து காட்டியதை மக்கள் அனைவரும் பாராட்டினார்கள். இச்செயலைக் கண்ட திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன்., இ.கா.ப அவர்கள், மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் திரு.செய்யது நிஷார் அகமது, அவர்களை நேரில் அழைத்து பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பத்திற்கு காசோலை

773 தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா 3 லட்சத்திற்கான காசோலையை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!