ராமநாதபுரம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆதிதிராவிட நலத்துறை பள்ளி கட்டடங்கள் மற்றும் விடுதிகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழகம் முழுவதும் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழிகாட்டல் படி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் வேண்டு கோளுக் கிணங்க காட்டு பரமக்குடி 26வது வார்டு ஆதிதிராவிடர் நலப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடம் திறப்பு விழா நடந்தது. நகராட்சி தலைவர் சே.கருணாநிதி குத்து விளக்கேற்றினார். ஆதிதிராவிட நலத்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியைகள் நகர்மன்ற உறுப்பினர்கள் ராதா, பூசத்துரை, கனிமொழி, துரைமுருகன், பிரபா சாலமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல்வர் திறந்துவைத்த பள்ளி கட்டிடங்கள்
