மீன்பிடி தொழிலாளி, வலையில் சிக்கி பலி

admin1

ராமநாதபுரம் : உச்சிப்புளி அருகே நாகாச்சி தேவர் நகரை சேர்ந்தவர் ராமு (50),  மீன்பிடி தொழிலாளியான இவர், நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு நாகாச்சியம்மன் கோயில் அருகே வைகையாற்று படுகையில், வலைவீசி மீன்பிடிக்க உறவினரான கிருஷ்ணன் என்பவருடன் சென்றார். ஆற்றில் வலை விரித்து விட்டு, பார்த்த போது ராமுவை காணவில்லை. வீடு திரும்பிய கிருஷ்ணன் இதுகுறித்து ராமு மனைவி மாரியம்மாள்,  மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் சென்று பார்த்த போது சற்று தொலைவில்,  வலையில் சிக்கிய நிலையில் ராமு கரையோரம் இறந்து கிடந்தார். உச்சிப்புளி காவல் துறையினர்,   விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பேருந்து விபத்தில், பெண் பலி

538 கரூர் :  கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சேர்ந்த கலாராணி, (55),  நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில், கரூர் மணப்பாறை சாலை லிங்கத்துார் பேருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452