மீனவரை கொன்று , மனைவி மகன் கைது

admin1

மயிலாடுதுறை :  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, கீழக்கரை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், (45),  மீனவர். மனைவி வசந்தா, (40),  இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தினமும் குடிபோதையில்,  வீட்டிற்கு வந்து, சக்திவேல் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் சக்தி வேல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று சக்திவேல் மர்மமான முறையில்,  தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் வீட்டின் அறையில்,  இறந்து கிடந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வசந்தாவிடம், விசாரித்த போது, தன்னிடம் தகராறு செய்துவிட்டு, சக்திவேல் மண்ணெண்ணெய்,  ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். நம்பிய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், நேற்று சக்திவேல் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்

.சுடுகாட்டில் தகன மேடையில்,  இறுதி சடங்குகள் நடைபெற்றதை,  அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன், சக்திவேல் இறப்பில்,  சந்தேகம் இருப்பதாக, திருவெண்காடு காவல் நிலையத்தில் , புகார் அளித்துள்ளார். காவல் துறையினர்,  சுடுகாட்டில் இருந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வசந்தா மற்றும் மகன் ரூபன், (23), ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், வசந்தா, சக்திவேலை சுத்தியலால்,  தலையில் அடித்துக் கொலை செய்ததும், அதை மறைக்க சக்திவேல் மீது, துணிகளை போட்டு மண்ணெண்ணெய்,  ஊற்றி எரித்து, அறை கதவை மூடியதும் தெரியவந்தது. தாய் கொலை செய்ததை மறைத்து மகன் ரூபன் தந்தையின்,  உடலை அடக்கம் செய்ய,  முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தாய் மகன் இருவரையும் காவல் துறையினர், கைது செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஓசூரில் பழ வியாபாரி தற்கொலை

557 திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவன்,  இவரது மகன் ஆகாஷ் (20),  இவர் ஓசூர் ராம்நகர் பகுதியில் தங்கி பழ வியாபாரம்,  செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452