மாற்றுதிறனாளிகளுக்கு அத்தியாவசியபொருட்கள் வழங்க போலீஸ் நியூஸ்+ உடன்கை கோர்த்த அம்பத்தூர் துணை ஆணையர்

Admin

கொரானாவிலிந்து இந்தியா மீண்டு வந்த நிலையில், இன்னும் முழுமையாக நாடு இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மீண்டும் தலை தூக்க துவங்கியுள்ளது. இதனால் மீண்டும் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகின்றது. மாற்று திறனாளிகள் பலர் இயல்பாக பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு, நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக நலிவுற்ற மாற்று திறனாளிகள் 56 பேருக்கு 1 மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. சென்னை பூந்தமல்லி, பஜார் தெரு கண்டோன்மென்ட் இந்திராணி திருமண மண்டபம் 08.04.2021 மற்றும் 10.04.2021 ஆகிய இரு தினங்களில் 56 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை சென்னை பெருநகர காவல் அம்பத்தூர் சரக துணை ஆணையர் திரு.மகேஷ்,IPS அவர்கள் துவக்கி வைத்தார்.

திரு.மகேஷ், ஐ.பி.எஸ் இவர் சென்னை, மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிய மிகுந்த அனுபவம் மிக்க அதிகாரி ஆவார். அவரின் சிறப்பான பணியை ஊக்குவிக்கும் வகையில், சென்னை பெருநகர அம்பத்தூர் காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அம்பத்தூர் சரக துணை ஆணையராக பணியில் நியமித்த சிறிது காலத்தில், அப்பகுதி மக்களின் அன்பை பெற்றுள்ளார். பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, காவல் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற்றவர்.

அம்பத்தூர் சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இங்கு தொழிற்பேட்டை உள்ளதால், சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களும் உள்ளதால், மிகவும் பரபரப்பான பகுதியாக திகழ்கின்றது. அங்கு எழும் சாவல்களை துணை ஆணையர் திரு.மகேஷ் அவர்கள் திறம்பட செயல்பட்டு குற்ற சம்பவங்கள், விபத்துக்கள் ஆகியவற்றை விழிப்புணர்வு ஏற்படுத்தி பெருமளவு குறைத்துள்ளார். துணை ஆணையர் திரு.மகேஷ் அவர்கள், இரவு பகல் பாராமல் உழைக்கும் தன்மையுடையவர். குற்ற வழக்குளை திறம்பட செயல்பட்டு, விரைந்து முடிக்கும் திறமையாளர். சமூக சேவையில் முதன்மையாளராக கலந்து கொள்ளும் பண்பாளர்.

மாற்றுதிறனாளிகளுக்கு தேவையான மளிகை பொருட்களை தன் அறைக்கு வர வைத்து அளிக்காமல், அவர்கள் மாற்று திறனாளிகள் உடல் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களை துணை ஆணையர் திரு.மகேஷ் அவர்கள், மாற்று திறனாளிகள் சிரமப்படுத்தாமல், அவர்கள் இருக்கும் இடத்திற்கு தானே வந்து அளித்தார். மாற்று திறனாளிகளுடன் மிகுந்து கனிவுடன் பேசி அவர்கள் குறித்து நலம் விசாரித்தார். காவல் துறை உங்களை போன்றோருக்கு பாதுகாப்பு அளிப்பது, தங்களது முதல் கடமையாக கருதுகிறது என்று கூறி, திறனாளிகளை உற்சாகப்படுத்தினார்.

அம்பத்தூர் சரக துணை ஆணையர் திரு.மகேஷ் அவர்கள் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அம்பத்தூரின் பல இடங்களில் பொது மக்கள் மற்றும் பலதரப்பட்ட வாகனஓட்டிகள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி பொது மக்களிடையே போக்குவரத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார். இந்த நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் அழைத்துவரப்பட்டு, போதுமான சமூக இடைவெளியை பின்பற்ற வைத்து மாஸ்க் அணிய வைத்து பழச்சாறு, பிஸ்கட், தண்ணீர் வழங்கப்பட்டு, பின்பு அவர்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும், அரசாங்கத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உதவிகளை இலகுவான முறையில் பெறுவதற்கான வழிமுறைகளையும், RTI ரமேஷ் அவர்கள் சொற்பொழிவாற்றி விளக்கினார்கள்.

மாற்று திறனாளிகளுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள சலுகைகள் குறித்தும், அதனை எவ்வாறு பெறுவது குறித்தும், தெளிவாக விளக்கி கூறினார்.

அதன்பின்பு ₹1200 மதிப்பிலான ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களை 56 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை பூந்தமல்லி சரகம் காவல் உதவி ஆணையர் திரு.என்.சுதர்சனம் அவர்கள் மாற்று திறனாளிகளுக்கு மகிழ்ச்சியுடன் வழங்கினார். பூந்தமல்லி சரகம் காவல் உதவி ஆணையர் திரு.என்.சுதர்சனம் சமூக சேவை என்றால், தனக்கு கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தையும் பொருட்படுத்தாமல், ஆர்வமுடன் கலந்து கொள்ளும் சுபாவம் உடையவர்.

W30 அனைத்து மகளிர் ஆய்வாளர் கே ஜோதிலட்சுமி அவர்களும் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளை உற்சாகப்படுத்தினார். நோய் தொற்று காரணமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே, காவல் பணி மட்டுமல்லாது, பல்வேறு சமூக நலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர். பெண்கள் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பாதுகாப்பிற்கும் அயராது பணியாற்றி வருபவர்.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் ஏற்பாட்டின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்து இருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வேடசந்தூரில் பூஜை நடத்தி ஏமாற்றிய நபர் கைது

435 திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் புதையல் எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தை கூறி நிர்வாண பூஜை நடத்தி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 22 லட்சம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!