மாற்றத்தை நோக்கி இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன், IPS

Admin

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை ( 1,14,572 ரூபாய் )மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை ( 1,14,572 ரூபாய் )மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினியிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு நிவாரண நிதியாக கொடுத்துள்ளார்.

கொடிய கொரானா நோய்த் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, நிதியை வழங்குமாறு பாரதப் பிரதமர் அவர்களும் மற்றும் தமிழக முதலமைச்சர் அவர்களும் கேட்டுக்கொண்டார்கள். அதன்படி பல்வேறு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் மற்றும் நிதியை வழங்கி வருகின்றனர்.

மக்களை காக்கும் காவலர்கள் 24 மணி நேரமும் வெயில் மழை பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனர் இந்த உன்னதமான பணி மட்டும் போதாது என்று முதலமைச்சர் நிவாரண நிதி உதவி வருகின்றனர். அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தனது ஒரு மாத ஊதியம் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 572 ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி இடம் வழங்கினார். தனது முழு மாத சம்பளத்தையும் நிவாரண நிதியாக கொடுத்த, கண்ணியம் தவறாத காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வேலூர் மாவட்டத்தில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அந்த மாவட்டத்தில் மணல் திருட்டு, சூதாட்டம் உள்ளிட்ட அனைத்து விதமான சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் சிறப்பாக கையாண்டு வருகிறார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதே வழக்கம், நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் குற்றவாளிகளை திருந்த வாய்ப்பு அளித்து, மறுவாழ்வு கொடுத்து, அவர்களையும் சமூகத்துடன் இணைந்து வாழ வாய்ப்பு அளித்தவர் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள்.

2017 ல் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் ஈடுபட்ட மானவர்களை திறம்பட கலைத்து அனுப்பிவைத்து முதல்வரின் பாராட்டை பெற்றவர் ராணிப்பேட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

1,386 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உண்மைக்கு மாறாக பொது மக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக ஊடகத்தில் வதந்தி பரப்புவோர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452