மனைவியை எரித்து கொன்ற, கணவருக்கு ஆயுள்தண்டனை!

admin1

சென்னை :  சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (62),  இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ஹரிகிருஷ்ணன் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில்,  ஈடுபட்டு வந்தார். கடந்த (20.01.2017 ), அன்று நடந்த தகராறின் போது தனது மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த காயம் அடைந்த சரஸ்வதி உயிரிழந்தார். இதுகுறித்து டிபி.சத்திரம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில்,  உள்ள மகளிர்நீதிமன்றத்தில்,  நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. காவல் துறையினர்,  தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, ஹரிகிருஷ்ணன் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

12 வயது மகளை திருமணம், செய்துவைத்த தாய் கைது!

554 சென்னை :   உத்தரகாண்ட் மாநிலம், பிதோரொகிரா மாவட்டத்தை சேர்ந்த (12),  வயது சிறுமியை (36), வயது நபருக்கு திருமணம் செய்துவைத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452