மனநிலை பாதித்த பெண்ணை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்

Prakash

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மு.மனோகர் I.P.S., அவர்கள் விருதுநகர் ஆர்யாஸ் ஹோட்டல் அருகில் நின்று கொண்டிருந்த சுமார் 55 வயது மதிக்கத்தக்க பெண் அழுக்கான உடைகளுடன் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதை கண்டு, சூலக்கரை காவல் ஆய்வாளர் திரு.ராம்ராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக இப்பெண்ணை மீட்டு அவரது சொந்த ஊரை கண்டுபிடித்து

அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி உத்தரவிட்டதை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் திரு.ராம்ராஜ் அவர்கள் உத்தரவின்படி சூலக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.கார்த்திகா, AHTU உதவி ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி மற்றும் முதல்நிலை பெண் காவலர் திருமதி.முத்துமணி ஆகியோர் அந்த பெண்ணை மீட்டு விசாரித்ததில் .

அவரது பெயர் பொன்னம்மாள், வயது 55, அவரது ஊர் அப்பநாயக்கன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நல்லமநாயக்கன்பட்டி என்பதையும் கண்டுபிடித்து அவரது உறவினர்களிடம் கொண்டு சென்று நல்ல முறையில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பேருந்து பயணியிடம் பணம் திருட முயற்சித்தவர் கைது.

288 இராமநாதபுரம்: மாவட்டம் பரமக்குடி வாரச் சந்தையில் பொருட்களை வாங்கி விட்டு, வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏற முயன்ற மகேஸ்வரி என்ற பெண்ணிடமிருந்து, பணத்தை திருட முயற்சித்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452