மதுரையில் 4031 வாகனங்கள் பறிமுதல்

Admin

மதுரை : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் யாரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவக்கூடும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையின் மூலமாக பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுவரை 144 தடை உத்தரவை மீறி காரணம் இல்லாமல் வெளியே சுற்றித் திரிந்த 8216 நபர்கள் மீது 7557 வழக்குகள் பதிவு செய்து அவர்களிடமிருந்து 4031 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருப்பூர் வடக்கு காவல் நிலைய காவலர்களின் மனிதாபிமான செயலை பாராட்டிய காவல் ஆணையர்

112 திருப்பூர் : திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திர பிரசாத் மற்றும் தலைமை காவலர் திரு.ராமர் மற்றும் முதல்நிலைக் காவலர் திரு.ராமகிருஷ்ணன் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452