மகன் தற்கொலை, அதிர்ச்சியில் பெற்றோர் விபரீதம்

admin1

ராணிப்பேட்டை :   மாவட்டம், காரையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், (62), சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி,(50) மகன்கள் விக்னேஷ், (31) ரமேஷ், (30) நான்கு ஆண்டுகளுக்கு முன், மூத்த மகன் விக்னேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .   கணவருடன் ஏற்பட்ட தகராறில் ரமேஷ் மனைவி,  பாரதி, குழந்தையுடன் சென்னை சென்று விட்டார். பலமுறை அழைத்தும் பாரதி வராததால், ரமேஷ் மனநிலை பாதிக்கப்பட்டது. இதனால் வேலுாரிலுள்ள தனியார்,  மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வாரம் வீடு திரும்பினார். நேற்று முன்தினம் இரவு,  அனைவரும் வீட்டில் துாங்கினர்.

மறுநாள் காலை, பெற்றோர் எழுந்து பார்த்த போது, படுக்கை அறையில் ரமேஷ் துாக்கிட்டு சடலமாக தொங்கினார். விரக்தியடைந்த பெற்றோரும், அதே அறையில் தனித்தனியாக,  துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.  நீண்ட நேரமாக வீட்டு கதவு திறக்கப்படாததால், அப்பகுதியினர் வந்து பார்த்த போது, மூவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து,  கொண்டது தெரிந்தது. ராணிப்பேட்டை காவல் துறையினர் , விசாரணை மேற்கொண்டனர். கைத்தறித் துறை அமைச்சர் காந்தி இறந்தவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கத்தியைக் காட்டி கைவரிசை, மர்ம நபர்கள் கைது

550 சென்னை :  சென்னை, கொளத்தூர், எம்.ஜி.ஆர்.நகர் ஏரிக்கரை, கங்கையம்மன் கோயில் தெருவில், நாகராஜன், (60), என்பவர் கடந்த 03.5.2022 , அன்று இரவு சுமார் 10.00 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452