போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய காவல் உதவி ஆணையர் திரு.சம்பத்

Admin

சென்னை:சென்னை மாவட்டம், கொரனா வைரஸ் பாதிப்பு தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் மாநகரம் முடங்கி கிடப்பதால் ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்கள் குடும்பம்  சமைக்க தேவைப்படும் மளிகை பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை.

நான் ஆட்டோக்காரன் நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன்
அம்மா தாய்மாரே ஆபத்தில் விடமாட்டேன்
வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்
அங்கங்கே பசி எடுத்தா பலகாரம் அளவு சாப்பாடு ஒரு நேரம்
பிரசவத்துக்கு இலவசமா வாரேன் மா
எழுத்து இல்லாத ஆளும் எங்கள நம்பி வருவான்
அட்ரஸ் இல்லாத தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்
இரக்கமுள்ள மனசுக்காரன் டா
நான் எப்பொழுதும் ஏழைக்கெல்லாம் சொந்தக் காரண்டா

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த பாட்ஷா திரைபடத்திற்காக வைரமுத்து எழுதிய ஆட்டோக்காரன் பாடல் வரிகள் இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. தமிழகத்தில் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்  இன்று உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிரபலமான பொன்மொழிகளில் ஒன்று “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு” என்ற முழக்கம் தமிழகத்தில் புகழ் பெற்ற ஒன்றாகும். அறிஞர் அண்ணாவின் “கடமை! கண்ணியம்! கட்டுப்பாடு!” என்ற இந்த மந்திரம் சொல் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர் திரு.B.சம்பத் அவர்களுக்கு பொருத்தமாக அமையும். இவர் அங்கு வாழும் மக்கள் இடத்தில் மட்டுமல்லாது உடன் பணியாற்றும் காவலர்களின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்றவர். அவசர நிலை பிரகடனத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ கோதுமை மாவு, ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில், சேமியா பாக்கெட் போன்ற மளிகை உணவு பொருட்கள் சென்னை பெருநகர காவல் உதவி ஆணையர் (போரூர்- எஸ்.ஆர்.எம்.சி) திரு.B.சம்பத் அவர்களால் திருக்கரங்களால் வழங்கப்பட்டது.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின், தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா மற்றும் அவரது குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளர் திரு.முகமது மூசா அவர்கள்  இரவு பகல்பாராமல் பம்பரமாக சுழன்று , ஏழை எளிய மக்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

144 தடையை மீறிய 674 பேர் கைது 635 வாகனங்கள் பறிமுதல்

233 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையை மீறிய 674 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 635 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இராமநாதபுரம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452