போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக திருவள்ளூர் செவ்வாபேட்டையில் கப சுர நீர் விநியோகம்

Admin

திருவள்ளூர்: இந்தியாவில் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளவர்களை கொரானா வைரஸ் தாக்காது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி நன்றாக இருந்தால், கொரானா வைரசை எதிர்த்து மனித உடலின் நோயெதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்பட்டு, அதிலிருந்து காப்பாற்றி விடும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை, எளிதாக தாக்கும் என்பதால் தான் முதியவர்கள் அதிகமாக தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதேபோல குழந்தைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் குழந்தைகளும் பாதிக்கப்படக்கூடும். நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படும், இளம் மற்றும் நடுத்தர வயதினரை தாக்கினாலும், அதில் இருந்து அவர் மீண்டும் உடல் நலம் பெற்றுவிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் திறன் கொண்ட சித்தமருத்துவ கப சுர குடிநீரை வாங்க மக்கள் அலை மோதுகின்றனர்.

மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்டுவதால் அதன் விலையை அதிகரித்து சிலர் விற்கின்றனர். அதற்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை உள்ள காவல்துறையினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கப சுர குடிநீர் வழங்கப்பட்டது.

நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர் திரு. சார்லஸ் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் செவ்வாபேட்டை கிராமத்தில், கபசுர குடிநீர் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி.ரமிஜா, செவ்வாபேட்டை ஊராட்சி தலைவர் திருமதி. டெய்சி ராணி அன்பு, வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர் மற்றும் செவ்வாபேட்டை காவல் நிலைய காவல் அதிகாரி திரு. பாஸ்கர், அவர்கள் கலந்து கொண்டு அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

நியூஸ் மீடியா அசோசியேஷனின் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி.ரமிஜா, அவர்கள் சிறந்த சமூக சேவையாளர், இவர் கீழ் சுமார் பணியாற்றும் 1000 பெண்களை சிறந்த முறையில் வழிநடத்தி வருகின்றார்.

திருமதி.ரமிஜா போற்றப்பட வேண்டியவர் மட்டுமல்ல, பின்பற்ற வேண்டியவர் கூட. அவர்களிடம் உள்ள சிறப்பு குணங்களை ஆண்கள் அறிந்து பின்பற்றினால், அவர்களுக்கு நிம்மதி கிடைப்பதுடன் குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை டென்ஷன்தான். குழந்தைகளை கவனித்து, படிப்பு, சாப்பாடு என எல்லாவற்றிற்கும் தயார் படுத்த வேண்டும். இத்தனை கடின வேலை பளுக்கிடையே திருமதி.ரமிஜா சமூக சேவையில் ஈடுபடுவது என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தண்டையார்பேட்டையில் பிரத்தியோக உடைகளை அணிந்து காவல்துறையினர் வேண்டுகோள்

234 சென்னை : சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் கொரோனா பாதித்தவர்கள் இருந்த பகுதியில் இரும்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதால், வடசென்னை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452