போக்குவரத்து காவலர்கள் சார்பாக கொரோனா விழிப்புணர்வு

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட ஆவடியில் போக்குவரத்து துணை ஆணையாளர் திரு.அசோக் குமார் உதவி ஆணையாளர் திரு.ஜெயகரன் அவர்களின் உத்தரவின்பேரில் இன்றுகொரானா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி போக்குவரத்து மேற்கு மாவட்ட துணை ஆணையாளர் திரு.அசோக் குமார் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி அறிவுரைகள் வழங்கினார்.

கொரானா வைரஸ் தாக்கத்தைபற்றியும் வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொழுது சில மாநிலங்களில் அதிக அளவில் பரவி வரும்கொரானாவைரஸ் தாக்கம் இருப்பதால் நம் மாநிலத்தில் பரவி விடாமல் தடுக்க தமிழக அரசு அதிக அளவில் முயற்சி செய்து வருகிறது அதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அரசுக்கு நாம் உறுதுணையாக இருந்து வீட்டிலிருந்து வெளியே செல்லும்பொழுது முக கவசம் அணிய வேண்டும் அடிக்கடி கிருமிநாசினி கையில் வைத்து கைகள் நன்கு கழுவ வேண்டும் பின்பு வீட்டிற்கு சென்றவுடன் நன்கு சோப்பினால் கைகளை கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தகொரானாவைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆய்வாளர் திரு.கோதண்டன் உதவி ஆய்வாளர்கள் திரு.பாஸ்கரன் திரு.ராஜேந்திரன் திரு.பழனிவேல் எஸ் எஸ் ஐ. திரு.செல்வராஜ் திரு.உமாபதி திரு.கோபாலகிருஷ்ணன் திரு.வெங்கடாச்சலம் திரு.பாஸ்கர் திரு.ரகுபதி தலைமை காவலர் திரு.சத்தியன் உட்பட பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் இந்த கொரானா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியை லயன்ஸ் கிளப் சார்பாக சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

284 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், தோக்கவாடி கிராமம், வடக்கு தெருவை சேர்ந்த விக்னேஷ் (எ) சஞ்சலான் 30,  பழனி 51.  என்பவரிடம் மேல்புழுதியூர் பழைய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452