பேருந்து ஓட்டுனரை, தாக்கியவர் கைது!

admin1

சென்னை :  ராயப்பேட்டை, வெஸ்ட்காட் சாலையில், நேற்று முன்தினம் மாலை, ‘தடம் எண்: 5சி’ மாநகர பேருந்து பயணியருடன் சென்றது.அப்போது, இரு சக்கர வாகனத்தில்,  வந்த வாலிபர் ஒருவர், பேருந்தை முந்த முயன்றார். பேருந்து ஓட்டுனர் அப்துல் வகாப், (45), வழிவிட மறுத்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த வாலிபர், பேருந்தை மறித்து கல்வீசி கண்ணாடியை உடைத்ததோடு, தட்டிக்கேட்ட ஓட்டுனரையும் தாக்கி தப்பினார்.இது குறித்து விசாரித்த அண்ணா சாலை காவல் துறையினர் , ஓட்டுனரை தாக்கிய கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த தருண், (25), என்பவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ரூ.34¾ லட்சம் வெளிநாட்டு, பணம் பறிமுதல்!

550 சென்னை :  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில்,  இருந்து விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள்,  தீவிரமாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452