பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

admin1

ராணிப்பேட்டை:  ராணிப்பேட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் மதுவிலக்குச் சட்டம் 14 (4)  இப்படி இரு சக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அரசுக்கு பறிமுதல் செய்ய ப்பட்டுள்ளன மேற்படி வாகனங்கள் தமிழ்நாடு அரசாணைகள் குறிப்பிட்டுள்ளபடி 29.03.2022  காலை 11.00 மணி முதல் ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலம் எடுக்க விருப்ப முள்ளவர்கள்  மேற்படி  வாகனங்களை26.03.2022  மற்றும் 27.03.2022 ஆகிய நாட்களில் பார்வையிடவும்28. 03.2022  ஆம் தேதி காலை 10.00  மணி முதல் மாலை 5. 00  மணி வரை ரூபாய் 15,000 முன்வைப்புத் தொகையை ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலைய வளாகத்தில் உள்ள அலுவலரிடம் தங்களுடைய பெயர் விலாசத்தை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

29. 03 2022 அன்று காலை 11. 00  மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும்.  மேலும் ஏலம் எடுப்பவர்கள் தங்களுடைய குடும்ப அட்டை வாக்காளர் அட்டை ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து தங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் . மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் இயலாமையுடன் GST  தொகை நேரடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என்று ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய  தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவலருக்கு பாராட்டு சான்றிதழ்

475 தருமபுரி:  தருமபுரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.S. வினோத் அவர்களின் சிறந்த பணியை பாராட்டி மேற்கு மண்டல காவல் துறைத்தலைவர் திரு .R. சுதாகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452