பரங்கிப்பேட்டை காவல்துறை சார்பாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு

Admin

விழுப்புரம்: பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்தில் பரங்கிப்பேட்டை காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.  இதில் டிஎஸ்பி கார்த்திகேயன், தாசில்தார், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹம்மது யூனுஸ் மற்றும் நிர்வாகிகள், லயன்ஸ் கிளப் தலைவர் கோ.அருள்முருகன் மற்றும் நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், துப்புரவு பணியாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி இடைவெளி விட்டு நின்று, டிஎஸ்பி அவர்கள் முன்மொழிய “விழித்திருப்போம், விலகி இருப்போம், தனித்து இருப்போம்” என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் கொரோனா குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவிகளாக அரிசி மற்றும் காய்கறிகள் நகர அஇஅதிமுக சார்பில் வழங்கப்பட்டன.

பரங்கிப்பேட்டை காவல்துறை நிகழ்வை பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் ஒருங்கிணைத்தனர். லயன்ஸ் கிளப் சார்பில் அகரம் அண்ணாமலை ஓவியம் வரைந்திருந்தார்.

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சர்க்கஸ் தொழிலாளர்களுக்கு உதவிய குளித்தலை போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர்

290 கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாளியாம்பட்டியில் மதுரை ஜீவா சர்க்கஸ் ஊழியர்கள் கடந்த 15 நாட்களாக தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452