பக்தர்கள் பாதுகாப்பு கருதி திருநெல்வேலி காவல்துறையினர் நடவடிக்கை

Admin
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சூட்டுபொத்தை பகுதியில் பிரசித்தி பெற்ற லிங்கேஸ்வரர் கோவிலில் இன்று காலை தேர்த்திருவிழா நடைபெற்றது.இந்த தேர் திருவிழாவில் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய ஊர்களைச் சேர்ந்த பலர் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
தேர்த் திருவிழாவில் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் மக்கள் அணிந்துள்ள நகைககளின் பாதுகாப்பு வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன்,இ.கா.ப, அவர்கள், அறிவுறுத்தலின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காவல் துறையினர் Safety pin (ஊக்கு) வழங்கியும், மர்ம நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு குறித்து அறிவுரை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் படிக்கட்டு பயணம் குறித்த விழிப்புணர்வு

755 திருவள்ளூர் : தமிழக போக்குவரத்து ஆணையர்-சேப்பாக்கம், சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் திரு ரவிச்சந்திரன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் திரு மோகன் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452