பகல் கொள்ளையர்களை 72 மணி நேரத்தில் பிடித்த திருவள்ளூர் நகர போலீசார்

Prakash

 திருவள்ளூர்: உதவி ஆய்வாளர் திருமதி.மாலா தலைமைகாவலர் சுமன் மற்றும் காவலர் அன்பரசிஅன்பரசுஆகியோர் தலைமையில் திருவள்ளூர் அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடித்த பகல் கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் வீரராகவர் கோவில் அர்ச்சகராக பணியாற்றியவர் சத்யநாராயணன் இவரது வீட்டில் கடந்த 29ஆம் தேதி ஆள் இல்லாத நேரம் பார்த்து பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 21 சவரன்தங்க நகை மற்றும் 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற இதுகுறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சி.சி.டிவி காட்சிகளை வைத்து தேடிவந்தனர்.

அதில் ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை கிண்டி சேர்ந்த அரவிந்த் குமார் வயது 37 இவரின் முக சாயல் ஒத்துப் போனது.

அவரை விசாரணை வளையத்திற்குள் காவல்துறையினர் கொண்டு வந்தனர் அப்போது அர்ச்சகர் வீட்டில் திருடியதை அரவிந்த் குமார் ஒப்புக்கொண்டார்இவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தமிழகம் முழுவதும் பகலில் சர்வசாதாரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது இவருக்கு வழக்கமாக கொண்டிருந்தார்.

என்றும் தமிழகம் முழுவதும் இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் 40 கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்தது இந்நிலையில் அரவிந்த் குமார் கடந்த ஆகஸ்ட் 22 ம் தேதி வேலூர் சிறையிலிருந்து பிணையில் வெளியே வெளியே வந்துள்ளார்.

சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் குமார் அவர் பழையபடி கொள்ளை படிக்கும் திட்டத்தை தீட்டி உள்ளார் அப்பொழுது அவருடன் சென்னை பெரம்பூர் வந்த விஜயராஜ் வயது இருபத்தி ஏழு என்ற நபர் தீபாவளி பண்டிகைக்கு பணம் தேவை என்பதால் அவர்களுடன் கூட்டு சேர்ந்து அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது.

இவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 21 சவரன் தங்க நகை 4 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்து கொள்ளையர்களை திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விபத்து நிகழாமல் தடுக்க சாலையை சரி செய்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர்.

286 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி பாபநாசம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452