நீரில் சிக்கியவர்களை மீட்ட பொன்னேரி தீயணைப்பு துறையினர்

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் அடுத்த  நாலூர் கேசவபுரம் பகுதி இந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த பல த்த  மழையினால் பல்வேறு வீடுகளி ல் தண்ணீர் சூழ்ந்து கொண்டது.

இச் சம்பவம் சாலையைவிட்டுசுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளபகுதியில் நடந்தது இவர்கள்வசிக்கும் வீட்டைச் சுற்றி மார்பளவு தண்ணீர் சூழ்ந்து கொண்டது அவர்கள் வெளியேற முடியாமல்தத்தளித்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் தீய ணைப்பு துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் பொன்னேரி தீயணைப்பு நிலைய அதிகாரி சம்பத் தலைமையில் ஊழியர்கள் லைப் பாய் ,லைப்ஜாக்கிட் ,கயிறு ,உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்களை மீட்க சென்றனர்.

ஆனால் சாலையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நீர் சூழ்ந்து இருந்தாலும் உள்ளே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

உடனே இந்த ஜேசிபி எந்திரம் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சென்ற னர் பின்னர் அதற்கு மேல் ஜேசிபி செல்ல முடியாததால்  ஒரு கிலோ மீட்டர் தூரம் தீயனைப்பு வீரர்கள்  தண்ணீரில் நீந்தி சென்று வீட்டில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு  வந்தனர்

இதில் 1 1/2 வயது குழந்தை மற்றும் பெண் உள்பட 4 பேரை பத்தி ரமாக மீட்டு வந்து வீடு அருகே உள்ள அரசு பள்ளியில் தங்க வைத்தனர்

பின்னர் மீண்டும் வட்டார வளர்ச்சி துறை மூலம் அவர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி தற்போது பாது காப்பாக உள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப் பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய காவல்துறை துணைத் தலைவர்

286 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய காவல்துறை துணைத் தலைவர் திருமதி. M. சத்யபிரியா இ.கா.ப., […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452