நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது!

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத்தளத்தில் வரும் உண்மைக்கு மாறான செய்திகளைப் பார்த்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை இணைந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம். எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உரிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் கூறியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கவரபேட்டை காவல் நிலையம் சார்பில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் மற்றும் முகக்கவசங்களை குமிடிப்பூண்டி ஆய்வாளர் சக்திவேல் வழங்கினார்

114 திருவள்ளூர் : கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் 144தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான இடங்களில் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452