நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

Prakash

சென்னை : ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த முகமதுஅர்மான் 29, என்பவர் சமூகவலைதளத்தில் நடிகர் ஆர்யாவாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த பெண்னிடம் பேசிவந்ததும்,

மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பறித்ததும், மேற்படி குற்றசெயலுக்கு முகமது அர்மானின் மைத்துனர் முகமது ஹுசைனி பையாக் 35, என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

உதவி ஆணையாளர் திரு.ராகவேந்திரா.திரு. K.ரவி தலைமையில் ஆய்வாளர் திரு.சுந்தர் மற்றும் தனிப்படையினர், மேற்படி குற்றவாளிகள்  முகமதுஅர்மான்  மற்றும் முகமது ஹுசைனி பையாக் ஆகிய  இருவரையும் ராணிப்பேட்டை மாவட்டம், பெரும்புலிப்பாக்கத்தில் கைது செய்தனர். குற்றவாளிகளிடம் இருந்து 2 மொபைல் போன்கள், 1 லேப்டாப், 1 ஐபேடு மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

9 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

277 காஞ்சி: காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!