தொழிலாளியின் இறுதி சடங்கிற்கு 5000 ரூபாய் கொடுத்து உதவிய சார்பு ஆய்வாளர்

Admin

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 03.04.2020 , ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் வேலு(41) இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். மனைவி , கணவன் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இந்த தகவல் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

உதவி ஆய்வாளர் திரு.ராபர்ட் செல்வ சிங் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் செங்கல் சூளை இயங்காத நிலையில் வேலுவிற்கு வேலை இல்லாததால் இறுதி சடங்கு செய்ய கூட வீட்டில் பணம் இல்லை. இதனையறிந்த உதவி ஆய்வாளர் ராபர்ட் சிங் பக்கத்தில் இருந்த ஏ. டி. எம்மில் தனது சொந்த பணத்தை எடுத்த இறுதி சடங்குக்காக ரூபாய் 5000 /- த்தை எடுத்து உறவினர்களிடம் கொடுத்து ஆறுதல் கூறினார். உதவி ஆய்வாளரின் இந்த மனிதாபிமான செயல் அங்கு இருந்தோரை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

121 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள உச்சிநத்தம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பழனிநாதன், முத்துக்குமார் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திருமதி.ஜான்சி ராணி அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452